புல்வாமா தாக்குதல்; தேசத்திற்கு எதிராக அவதூறு, மாணவிகளை போலீஸ் காவலில் எடுத்தது

புல்வாமா தாக்குதலை அடுத்து வீரர்களை கிண்டல் செய்து தேசத்திற்கு எதிராக அவதூறு பரப்பிய காஷ்மீர் மாணவிகள் 4 பேரை போலீஸ் காவலில் எடுத்துள்ளது.

Update: 2019-02-17 12:44 GMT
புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தால் நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் புல்வாமா தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும், வீரர்களை கிண்டல் செய்தும் சிலர் சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்பி வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராஜஸ்தானில் உள்ள நிம்ஸ் பல்கலையில் 4 மாணவிகள் இதுபோன்று அவதூறு தகவல்களை வெளியிட்டுள்ளனர். அவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. 

மாணவிகள், பிஎஸ்சி 2வது ஆண்டு படிக்கும் தல்வீன் மன்சூர், ஜோகிரா நசீர், உஸ்மா நசீர், இக்ரா என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புல்வாமாவில் நடந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்ததை கொண்டாடும் வகையில், தேசவிரோதமான புகைப்படங்களை பதிவிட்டதாகவும், இதனால், மாணவர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்களை சகித்துக்கொள்ள முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகளை காவல் நிலையத்திடம் கல்லூரி நிர்வாகம் ஒப்படைத்து உள்ளது. புல்வாமா தாக்குதலை கொண்டாடும் விதமாக அவர்களுடைய சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்