ராஜஸ்தான்: கார் மீது லாரி கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உறவினரின் பிறந்தநாள் விழாவை கொண்டாட இன்று அதிகாலை கோடா நகருக்கு காரில் சென்றுகொண்டிருந்தனர்.
கோடா மாவட்டத்தில் பண்டி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் பின்னால் வந்துகொண்டிருந்த லாரி கார் மீது மோதியது. டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் முன்னே சென்ற கார் மீது மோதி அதன்மீது கவிழ்ந்து விழுந்தது.
இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயங்களுடன் உயிர் தப்பினார். லாரி டிரைவரும் உயிர் தப்பினார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், மீட்புக்குழுவினர் உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த 2 பேரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.