கடலூரில் சிறுவர்களை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்த இளைஞர் - போலீஸ் வழக்குப்பதிவு

சிறுவர்களுக்கு மது கொடுத்த இளைஞரின் பெயர் முகுந்தன் என்பது விசாரணையில் தெரியவந்தது.;

Update:2025-12-19 20:54 IST

கடலூர்,

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே சிறுவர்களை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிதம்பரத்தை அடுத்துள்ள அம்மன் கோவில் கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் 3 பேரை இளைஞர் ஒருவர் கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் இது குறித்து விசாரணை நடத்தினார். அதில், சிறுவர்களுக்கு மது கொடுத்தவர் அதே பகுதியை சேர்ந்த முகுந்தன் என்பது தெரியவந்தது. இந்நிலையில் முகுந்தன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்