பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தை வெளிப்படுத்த ஆவணங்களை சேகரிக்கும் இந்தியா

உலக அரங்கில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தை வெளிப்படுத்த இந்தியா ஆவணங்களை சேகரித்து வருகிறது.

Update: 2019-02-20 09:33 GMT
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் இந்தியாவில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆனால், பாகிஸ்தான் மறுப்பு தெரிவிக்கிறது. புல்வாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் மீது இந்தியாவின் கோபம் அதிகரித்துள்ளது. உலக அரங்கில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தேவையான நடவடிக்கையை எடுக்கத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தை வெளிப்படுத்த ஆவணங்களை இந்தியா சேகரித்து வருகிறது.

இந்தியா - பாகிஸ்தான் உறவு தொடர்பாக ஆலோசனையை மேற்கொள்ள பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா,  இன்று காலை உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பை அடுத்து பிசாரியா பேசுகையில், உலக நாடுகளுடன் இந்திய தூதர்கள் தொடர்பில் உள்ளனர். இதைத்தவிர சொல்வதற்கு எதுவும் கிடையாது என்றார்.  உலக அரங்கில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தை வெளிப்படுத்த உள்துறை அமைச்சகம் புதிய ஆவணங்களை சேகரித்து வருகிறது. பாகிஸ்தானின் பொய்களை அம்பலப்படுத்த உலகில் உள்ள இந்திய தூதர்களிடம் இவை வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

புல்வாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா தங்கள் நாட்டு தூதர்களை திரும்ப அழைத்தனர். 

அமெரிக்காவிற்கான இந்திய தூதரான ஹர்ஷ் வரதன் ஸ்ரீங்கலாவுடனும் ராஜ்நாத் சிங் ஆலோசனையை மேற்கொண்டுள்ளார். 

மேலும் செய்திகள்