இமாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்கள்: மீட்கும் பணி தீவிரம்

இமாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கிய 5 ராணுவ வீரர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2019-02-20 15:00 GMT
சிம்லா,

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் கின்னனூர் மாவட்டத்தில் உள்ள நம்கியா பகுதியில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் ராணுவ வீரர்கள் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் மற்றும் போலீசார் 5-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை தேடும் பணியில்  ஈடுபட்டுள்ளனர். இதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்