காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடத்தாததால் மத்திய அரசு மீது மெகபூபா முப்தி விமர்சனம்

காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகாததால் மத்திய அரசை மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.

Update: 2019-03-11 01:47 GMT
ஸ்ரீநகர், 

காஷ்மீர் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்படவில்லை.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காஷ்மீர் முன்னாள் முதல்–மந்திரியும், தேசிய மாநாடு கட்சியின் துணைத்தலைவருமான உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘பிரதமர் மோடி பாகிஸ்தானிடம், பயங்கரவாதிகளிடம், ஹூரியத் அமைப்பிடம் (பிரிவினைவாத அமைப்பு) சரண் அடைந்துவிட்டார். நன்றாக செய்து விட்டீர்கள் மோடி. 56 அங்குல மார்பு தோற்றுப்போய் விட்டது’’ என கூறி உள்ளார். மேலும், ‘‘காஷ்மீர் தேர்தல் மீது சர்வதேச கவனம் ஈர்க்கப்பட்டுள்ள நிலையில், உலக அரங்கில் பிரதமர் மோடி தனது தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்புவார் என நான் ஒருபோதும் கருதவில்லை’’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், மெகபூபா முப்தியும் விமர்சனம் செய்துள்ளார். மெகபூபா முப்தி கூறும் போது, ”ஜம்மு காஷ்மீரில் உள்ள மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டிருப்பது மத்திய அரசின் சதித்திட்டத்தை காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்