பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு இன்று சம்பளம் கிடைக்கும் - நிர்வாக இயக்குனர் அறிவிப்பு

பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு இன்று சம்பளம் கிடைக்கும் என்று நிர்வாக இயக்குனர் அறிவித்துள்ளார்.

Update: 2019-03-14 22:30 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள 1.76 லட்சம் பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஊழியர்கள் மார்ச் மாத சம்பளம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இதுபற்றி பி.எஸ்.என்.எல். தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனுபம் ஸ்ரீவஸ்தவா ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அதில், “பி.எஸ்.என்.எல். தனது ஊழியர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) சம்பளம் வழங்கும். மார்ச் மாதத்தில் ரூ.2,700 கோடி இயல்பான வருவாய் வரும் என எதிர்பார்த்தோம். இதில் ரூ.850 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது. மூலதன தேவைக்காக ரூ.3,500 கோடி வங்கிக்கு செலுத்த இருக்கிறோம். இதன்மூலம் இனிவரும் மாதங்களில் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படாது. உரிய நேரத்தில் இந்த பிரச்சினையில் தலையிட்டு உதவிய தொலைதொடர்பு மந்திரி மனோஜ் சின்ஹாவுக்கும், தொலைதொடர்பு சேவையை தொடர்ந்து வழங்கிவந்த ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்