ரெயில் டிக்கெட்களில் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார்

ரெயில் டிக்கெட்களில் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-03-20 08:24 GMT
ரெயில் டிக்கெட்களில் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயலாகும் என தேர்தல் ஆணையத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் புகார் கடிதம் எழுதியுள்ளது.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் விளம்பரம் ரெயில்வே டிக்கெட்களில் இடம்பெற்றுள்ளது.
 
“தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் ரெயில்வே தரப்பில் வழங்கப்படும் டிக்கெட்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜனதா அரசின் சாதனைகளுடன் விளம்பரம் வெளியிடப்படுகிறது. பொதுச் செலவினத்தில் வெளிப்படையாக வாக்காளர்களின் மனதில் செல்வாக்கு ஏற்படுத்தும் விதமாக விளம்பரம் பிரசுரிக்கப்படுகிறது. இத்தகைய விளம்பரங்களை ரெயில்வே டிக்கெட்களில் அச்சிடுவதை நிறுத்தி பா.ஜனதாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்று தேர்தல் ஆணையத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.

மேலும் செய்திகள்