இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயற்சி: டி.டி.வி.தினகரன் வழக்கில் இடைக்கால தடை நீட்டிப்பு

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக, தன் மீது டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரி டெல்லி ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் மனு தாக்கல் செய்து இருந்தார்.

Update: 2019-03-20 23:15 GMT

புதுடெல்லி,

டி.டி.வி.தினகரனின்  மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சுனில் கவுர், அந்த வழக்கு விசாரணைக்கு மார்ச் 20–ந் தேதி வரை (நேற்று) இடைக்கால தடை விதித்து இருந்தார்.

இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை வருகிற 27–ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் இது தொடர்பான மற்றொரு வழக்கில் தினகரனின் குரல் மாதிரியை பதிவு செய்ய டெல்லி போலீசுக்கு டெல்லி தனிக்கோர்ட்டு அனுமதி வழங்கியதற்கு எதிராக தினகரன் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கும் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பின்னர் வழக்கு விசாரணையை வருகிற ஏப்ரல் 30–ந் தேதிக்கு ஒத்திவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்