அரசுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை வருவாய், இலக்கை தாண்டி சாதனை - அருண் ஜெட்லி

அரசுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை வருவாய், இலக்கை தாண்டி சாதனை படைத்துள்ளது என நிதி மந்திரி அருண் ஜெட்லி தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-23 00:00 GMT

புதுடெல்லி, 

நடப்பு நிதியாண்டில், அரசுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் ரூ.80 ஆயிரம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால், அந்த இலக்குக்கு மேல் கூடுதலாக ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து இருப்பதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

எனவே, இந்த நிதியாண்டில் பங்கு விற்பனை வருவாய் ரூ.85 ஆயிரம் கோடியாக இருப்பதாகவும், அடுத்த நிதியாண்டில் ரூ.90 ஆயிரம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்து இருப்பதாவும் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்