அசாமில் காங்கிரஸ் வேட்பாளர் மீது தாக்குதல்

அசாமில் காங்கிரஸ் வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

Update: 2019-04-07 01:19 GMT
கவுகாத்தி, 

அசாம் மாநிலத்தில் முதற்கட்ட நாடாளுமன்ற தேர்தல் வருகிற 11–ந் தேதி நடைபெற உள்ளது. அங்குள்ள லகீம்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அனில் போர்கொயின் போட்டியிடுகிறார். இவர் தேமாஜி மாவட்டத்தில் சிலபதார் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த எதிர்க்கட்சியினர் சிலர் அனில் போர்கொயினை தாக்கினர். பின்னர் அவரது வாகனத்தை தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர். இதில் காயம் அடைந்த அவர் திப்ருகார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிலபதார் போலீசார் 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.






கடன் மோசடி, சி.பி.ஐ. சோதனை

ரூ.2,348 கோடி வங்கி கடன் மோசடி புகாரில் தனியார் நிறுவன அலுவலகங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தினர்.

புதுடெல்லி,

வங்கியில் கடன் வாங்கி விட்டு திரும்ப செலுத்திடாமல், பூ‌ஷண் ஸ்டீல் மற்றும் பவர் லிமிடெட் என்ற இரும்பு மற்றும் மின் உற்பத்தி நிறுவனம் அனுமதிக்க இயலாத அளவான ரூ.2,348 கோடிக்கு மோசடி செய்துள்ளது என புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சி.பி.ஐ. அந்த நிறுவனம் மீதும், அதன் இயக்குனர்கள், அடையாளம் தெரியாத அரசு அலுவலர்கள் மற்றும் சில தனிநபர்கள் மீது வழக்கு பதிவு செய்தது.

டெல்லி, சண்டிகார், கொல்கத்தா போன்ற பல இடங்களில் உள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகங்கள், இயக்குனர்களின் வீடுகள் உள்பட பல இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

மேலும் செய்திகள்