பா.ஜனதா தலைவர் செய்தியாளர் சந்திப்பின் போது ஷூ வீச்சு

பா.ஜனதா தலைவர் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் மீது ஷூ வீசப்பட்டது.

Update: 2019-04-18 08:53 GMT
மராட்டிய மாநிலம் மாலேகானில் கடந்த 2008-ல் குண்டுவெடிப்பு நடந்ததில் கைது செய்யப்பட்டவர் சாத்வி பிரக்யா தாக்கூர். இவரை குற்றப்பத்திரிகையில் இருந்து தேசிய புலனாய்வு முகமை  2016 மே மாதம் நீக்கியது. ஆனால் நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து பிரக்யா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு எதிராக பிற குற்ற வழக்குகள் விசாரணையில் உள்ளது.

பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பிரக்யாவை போபால் வேட்பாளராக பா.ஜனதா நிறுத்தியுள்ளது. 1989-ல் இருந்து பா.ஜனதாவின் கோட்டையாக இருந்து வரும் போபாலில் களமிறக்கப்பட்டுள்ளார் பிரக்யா.

பிரக்யாவை வேட்பாளராக நிறுத்தும் அறிவிப்பை டெல்லி பா.ஜனதா தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவர் நரசிம்ம ராவ் வெளியிட்டார். அப்போது ஒருவர் நரசிம்ம ராவ் மீது ஷூவை வீசியுள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளது. ஷூ வீசிய நபர் தன்னை ஒரு மருத்துவர் என அடையாளப்படுத்தியுள்ளார். அவரை உடனடியாக பாதுகாவலர்கள் வெளியேற்றியுள்ளனர். அவர் ஏன் ஷூவை வீசினார்? என்பது தொடர்பான தகவல் வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்