வாரணாசியில் ஆதரவாளர்களுடன் ஆறு கி.மீ. தூரம் வரை பேரணியாக சென்ற பிரதமர் மோடி

பிரதமர் மோடி 2-வது முறையாக போட்டியிடும் வாரணாசி தொகுதியில் இன்று மெகா பேரணி நடந்தது.

Update: 2019-04-25 16:42 GMT
வாரணாசி,

மக்களவைத் தேர்தலில் வாராணசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, அந்த தொகுதியில் நாளை (ஏப்.26) வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இதனையொட்டி பிரதமர் மோடி இன்று மாலை வாரணாசி வந்தார். தொடர்ந்து ஆதரவாளர்களுடன் மோடி 6 கி.மீ. தூரம் வரை பேரணியாக சென்றார்.

 பிரதமர் வருகையை முன்னிட்டு வாராணசியில் உள்ள கோயில்கள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. வழி நெடுகிலும் அலங்கார சுவரொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இங்குள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் 5 லட்சம் தீபம் ஏற்றப்பட்டது. பனராஸ் இந்து பல்கலை., வளாகம் லங்கா கேட் அருகே இருந்து பேரணி துவங்கியது. வாரணாசி கங்கை நதியில்  சுமார் 30 நிமிடம் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.

பேரணியில் பா.ஜ., தலைவர் அமித்ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்கின்றனர். பேரணி துவங்கும் இடத்திற்கு வந்த பிரதமர் மோடி அங்கு இருந்த மாளவியா சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து பிரதமர் மோடி திறந்த ஜீப்பில் நின்றவாறு பேரணியாக புறப்பட்டு சென்றார். பிரதமரை வரவேற்க இருபுறங்களிலும் மக்கள் திரளாக நின்றிருந்தனர். பல லட்சம் தொண்டர்கள் புடை சூழ இந்த பேரணி நடந்தது.

வாரணாசியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பேரணியில் தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் , தேனி மக்களவை தொகுதி அ,.தி,மு.க., வேட்பாளருமான ரவீந்திரநாத்குமார் ஆகியோர் பங்கேற்றனர். தொரடர்ந்து அவர்கள் பாஜக ,தேசிய தலைவர் அமித்ஷாவையும் சந்தித்து பேசினர்.

மேலும் செய்திகள்