ஏர் இந்தியா விமான சேவை 2-வது நாளாக பாதிப்பு

ஏர் இந்தியா விமான சேவை 2-வது நாளாக பாதிக்கப்பட்டது.

Update: 2019-04-28 19:30 GMT
புதுடெல்லி,

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர்இந்தியா நிறுவனம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமானத்தை இயக்கி வருகிறது. மேலும் அலையன்ஸ் ஏர் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய துணை நிறுவனங்களின் பயணிகள் விமானத்தையும் இந்த நிறுவனம் இயக்கி வருகிறது. இந்தநிலையில் பயணிகள் சேவைக்கான கம்யூட்டர் சாப்ட்வேரில் நேற்று முன்தினம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் உலகம் முழுவதும் ஏர் இந்தியா விமானத்தின் சேவை பாதிக்கப்பட்டது.

இதேபோல் நேற்று அதிகாலை 3.30 மணி முதல் காலை 8.45 மணி வரை பயணிகள் சாப்ட்வேர் செயல்படவில்லை. இதன்காரணமாக 137 விமானங்கள் சேவையில் தாமதம் ஏற்பட்டது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின அதிகாரி ஒருவர் கூறும்போது, “பயணிகள் சேவைக்கான சாப்ட்வேர் நேற்று அதிகாலை முதல் சுமார் 5 மணிநேரம் வரை செயல்படாததால் முதலாவது பிரிவான டெல்லி -மும்பை பிரிவில் உள்ள 137 விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டது” என்றார்.

மேலும் செய்திகள்