அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட எனக்கு சீட் வழங்க மறுத்து விட்டனர் - நவ்ஜோத் கவுர் சித்து மீண்டும் குற்றச்சாட்டு

அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட முதல்-மந்திரி அம்ரீந்தர் சிங் எனக்கு வாய்ப்பு வழங்க மறுத்து விட்டார் என சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்து மீண்டும் கூறியுள்ளார்.

Update: 2019-05-17 10:26 GMT
அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 13 இடங்களுக்கு நாளை மறுதினம் (19-ம் தேதி) தேர்தல் நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைகிறது.  பாஜக - அகாலிதளம் ஓரணியாகவும், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடுகின்றன. இதனால் பல தொகுதிகளில் மும்முனை போட்டி நிலவி வருகிறது.

சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால் அவருக்கு போட்டியிட, பஞ்சாப் மாநில முதல்-மந்திரி அம்ரீந்தர் சிங் வாய்ப்பு வழங்க மறுத்து விட்டதாக தகவல் வெளியானது. இதற்கு பதில் அளித்த அம்ரீந்தர் சிங், ‘சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது பொய்யான குற்றச்சாட்டு. போட்டியிட அவர் விரும்பவில்லை எனக்கூறினார்.

இந்நிலையில் இது குறித்து நவ்ஜோத் சிங் சித்து மனைவி நவ்ஜோத் கவுர் சித்து கூறுகையில்,

அமிர்தசரஸ் தொகுதி தான் எனது சொந்த ஊர். எனவே அங்கு போட்டியிடவே நான் விரும்பினேன். ஆனால் வேறு தொகுதியில் நிற்குமாறு கூறிவிட்டார்கள். தசரா சம்பவத்தால் எனக்கு மக்களிடம் நல்ல பெயர் இல்லை என தெரிவித்தார்கள். 

அவர்கள் சொல்லும் தொகுதியில் எனக்கு யாரையும் தெரியாது. பிறகு அங்கு எப்படி என்னால் போட்டியிட்டு வெற்றி பெற முடியும்.  அமிர்தசரஸ்  தொகுதியில் போட்டியிட எனக்கு சீட் வழங்காமல் முதல்-மந்திரி அம்ரீந்தர் சிங் மற்றும் ஆஷா குமாரியும் மறுத்துவிட்டனர் என்றார்.

மேலும் செய்திகள்