அருணாசலபிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்தது : சிக்கிமில் மாநில கட்சி வெற்றி

அருணாசல பிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பாரதீய ஜனதா ஆட்சியை தக்கவைத்தது. சிக்கிமில் மாநில கட்சி வெற்றி பெற்றது.

Update: 2019-05-23 23:16 GMT

இட்டாநகர், 

அருணாசல பிரதேச மாநிலத்தில் முதல்–மந்திரி பீமா காண்டு தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடந்து வந்தது.

இங்கு நாடாளுமன்ற தேர்தலுடன் 60 இடங்களை கொண்ட சட்டசபைக்கும் ஏப்ரல் 11–ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இங்கு கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று, பாரதீய ஜனதா கட்சி ஆட்சியை தக்க வைத்துள்ளது. பீமா காண்டு, மீண்டும் முதல்–மந்திரி பதவியை ஏற்பார்.

சிக்கிமில் முதல்–மந்திரி பவன்குமார் சாம்லிங் தலைமையில் சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்.டி.எப்.) கட்சி ஆட்சி நடந்து வந்தது. இங்கு நாடாளுமன்ற தேர்தலுடன் 32 இடங்களை கொண்ட சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் மாநில கட்சிகளான சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்.டி.எப்.) கட்சிக்கும்., சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா (எஸ்.கே.எம்.) கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.

இந்த தேர்தலில் சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா கட்சி கூடுதல் இடங்களை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

மேலும் செய்திகள்