நீட் வினாத்தாள் கசிவு? - ராகுல் காந்தி விமர்சனம்

நீட் வினாத்தாள் கசிவு, 23 லட்சம் மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கனவுகளை ஏமாற்றும் செயல் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-06 10:57 GMT

புதுடெல்லி,

நாடு முழுவதும் நேற்று மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த புகாரில் 2 மருத்துவ மாணவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியாகி வரும் நிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது அம்பலமாகியுள்ளது.

இந்த நிலையில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது:

"நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என்ற செய்தி 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கனவுகளை ஏமாற்றும் செயல் ஆகும். 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர வேண்டும் என்று கனவு காணும் மாணவர்களாக இருந்தாலும் சரி, அரசு வேலைக்காக போராடும் நம்பிக்கைக்குரிய இளைஞர்களாக இருந்தாலும் சரி, மோடி அரசு அனைவருக்கும் சாபமாகி விட்டது. கடுமையான சட்டங்கள் இயற்றப்படுவதன் மூலம் வினாத்தாள் கசிவில் இருந்து இளைஞர்களை விடுவிக்க காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது." என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்