பெண்ணை தாக்கும் பாஜக எம்.எல்.ஏ. வைரலாகும் வீடியோ
பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் பெண்ணை தாக்கும் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.
அகமதாபாத்,
அகமதாபாத் நகர நரோடா தொகுதியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பால்ராம் தவாணி ஒரு பெண்ணை தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. இந்த சம்பவம் பாரதீய ஜனதா அலுவலகத்திற்கு வெளியே நடந்து உள்ளது.
சம்பந்தப்பட்ட பெண் தண்ணீர் பற்றாக்குறை பற்றி புகார் கூற வந்து உள்ளார். அப்போது அந்த பெண்ணை எம்.எல்.ஏ. தாக்கி உதைத்தார். வீடியோவில் கீழே தள்ளிவிடப்படும் பெண்னை ஒரு கும்பல் தாக்குகிறது. அந்த பெண்ணை உதைக்கிறார்கள். எனினும் பின்னர், பால்ராம் தவாணி எம்.எல்.ஏ. அந்த பெண்ணிடம் வருத்தம் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்து உள்ள பலராம் தவாணியின் சகோதரர் கிஷோர் தவாணி தாக்கியவர்கள் குறித்து குற்றம்சாட்டினார்.
गुजरात के विद्यायक महिला को लाते मारते हुए :
— Jignesh Mevani (@jigneshmevani80) June 2, 2019
अहमदाबाद के नरोडा ईलाके में पानी की किल्लत की शिकायत करने गई एक महिला को गुजरात भाजपा के 'माननीय' विधायक बलराम थावानी ने खुलेआम बेरहमी के साथ पिटा ! @dgpgujarat, @AhmedabadPolice आप तुरंत गिरफ्तारी कीजिए! यह हरगिज नहीं चलेगा! pic.twitter.com/6mV7EmC6KV