வெற்றி பெற்ற பின் முதல் முறையாக ரேபரேலி சென்றார் சோனியா காந்தி

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பின் முதல் முறையாக சோனியா காந்தி ரேபரேலி சென்றார்.

Update: 2019-06-12 07:24 GMT
ரேபரேலி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தான் வெற்றி பெற்ற  மக்களவை தொகுதியான ரேபரேலிக்கு இன்று சென்றார். அவரது மகளும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார். ரேபரேலி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சோனியா காந்தி சென்றுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரேபரேலி சென்ற சோனியாகாந்தியை கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

மேலும் செய்திகள்