மேற்கு வங்காளத்தில் பதற்றம்: பா.ஜனதா தொண்டர் அடித்துக்கொலை

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா தொண்டர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டதால், அங்கு பதற்றம் நிலவுகிறது.

Update: 2019-06-22 21:30 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து அரசியல் வன்முறை தாண்டவமாடி வந்தது. இந்த நிலையில் அங்கு வடக்கு பர்கானா மாவட்டத்தில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

அவர்கள் அணிவகுத்து வந்த பாதையில், பாரதீய ஜனதா கட்சி தொண்டர் நஜிமுல் கரீம் (வயது 23) என்பவர் ஒரு கும்பலால் அடித்துக்கொல்லப்பட்டார். இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து பாரதீய ஜனதாவுக்கு தாவியவர் ஆவார். இந்த கொலை அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அங்கு மீண்டும் வன்முறை ஏற்படும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்து அறிக்கை அளிக்க பாரதீய ஜனதா கட்சி குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகள்