பிளாஸ்டிக் கழிவு இறக்குமதி தடையை அமல்படுத்துங்கள் - மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

பிளாஸ்டிக் கழிவு இறக்குமதி தடையை அமல்படுத்துங்கள் என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-06-23 22:44 GMT
புதுடெல்லி,

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அமித் ஜெயின் என்பவர் ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.

அந்த வழக்கில் அவர், ‘‘செங்கல் சூளைகளில் எரிப்பதற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து மலிவான கழிவு காகிதம் மற்றும் சாலைகளை துடைக்கும் கழிவுகளை இறக்குமதி செய்கிறார்கள். இவற்றை எரிக்கிறபோது சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது’’ என கூறி இருந்தார்

இந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்‌‌ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

இந்த விசாரணையின்போது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

அந்த உத்தரவில், ‘‘சுற்றுச்சூழலுக்கு அபாயகரமானதாக உள்ளதால் பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை அமல்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து 2 மாதங்களில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் இ மெயில் மூலம் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்