ஆகஸ்டு மாதம் முதல் பிளாஸ்டிக் இறக்குமதிக்கு தடை - மத்திய அரசு

ஆகஸ்டு மாதத்தில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

Update: 2019-06-24 16:16 GMT


மாநிலங்களவையில் மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில், நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவு உருவாகிறது. அவற்றில் 13 ஆயிரம் டன் மட்டுமே சேகரிக்கப்படுகிறது. எனவே, காற்று மாசை கட்டுப்படுத்தும்விதமாக, ஆகஸ்டு மாதத்தில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளோம் எனக் கூறியுள்ளார். 



மேலும் செய்திகள்