பிரதமர் மோடி பற்றி விமர்சனம்: கண்டனம் எழுந்ததால் மன்னிப்பு கேட்ட காங்கிரஸ் எம்.பி.

பிரதமர் மோடி பற்றி விமர்சனம் செய்த காங்கிரஸ் எம்.பி., அதற்கு கண்டனம் எழுந்ததால் மன்னிப்பு கேட்டார்.

Update: 2019-06-24 22:15 GMT
புதுடெல்லி,

மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பிரதமர் மோடி குறித்து ஒரு கருத்தை தெரிவித்தார். பின்னர் அதனை சபாநாயகர் ஓம் பிர்லா அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார்.

பா.ஜனதா செயல் தலைவர் ஜே.பி.நட்டா காங்கிரஸ் எம்.பி.யின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார். “125 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை காங்கிரஸ் தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் காங்கிரசுக்கு பதில் அளித்து வருகிறார்கள். அவர்களது கர்வமே அவர்களை அழித்துவிடும்” என்று அவர் கூறியுள்ளார்.

இதுபற்றி நிருபர்களிடம் ஆதிர் ரஞ்சன் எம்.பி. கூறும்போது, “நான் இந்தி பேசுபவன் அல்ல. எனது இந்தி நன்றாக இருக்காது. பா.ஜனதா எம்.பி. ஒருவர் விவேகானந்தருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு பேசியது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. எனவே கங்கையை கால்வாயுடன் ஒப்பிடக்கூடாது என்றேன். நான் கால்வாய் என்று கூறியது கழிவுநீர் கால்வாய் அல்ல, பாசன கால்வாய். எனக்கு பிரதமரை இழிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அவர் எனக்கும் பிரதமர் தான். எனது கருத்து பிரதமரை காயப்படுத்தியிருந்தால் நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

மேலும் செய்திகள்