தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை சரி செய்ய அதிமுக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது - மக்களவையில் அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் பேச்சு

தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையை சரி செய்ய அதிமுக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என மக்களவையில் அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் பேசினார்.

Update: 2019-06-26 08:30 GMT
புதுடெல்லி

மக்களவையில் அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் பேசும் போது கூறியதாவது;-

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை போக்க, பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தவறான தகவல்களை பரப்புகின்றனர். அரசின் திட்ட பட்டியல்களை திமுகவுக்கு வழங்கவும் தயார்.

தமிழக அரசின் பிரதிநிதியாக நான் ஒருவன் மட்டுமே இருக்கிறேன்; எனக்கு எதிராக இருக்கும் 37 பேர் பொய் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர் என கூறினார்.

மேலும் செய்திகள்