நைஜீரியாவில் கடத்தப்பட்ட 5 இந்திய மாலுமிகள் 2 மாதங்களுக்கு பிறகு மீட்பு

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 5 இந்திய மாலுமிகள், 2 மாதங்களுக்கு பிறகு மீட்கப்பட்டனர்.

Update: 2019-06-28 20:30 GMT
புதுடெல்லி,

நைஜீரியாவில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி 5 இந்திய மாலுமிகள் கப்பலில் சென்று கொண்டிருந்தனர். நடுக்கடலில் அவர்களை ஒரு மர்ம கும்பல் கடத்தியது. கப்பலில் இருந்து கரைக்கு அழைத்துச் சென்று ரகசிய இடத்தில் சிறை வைத்தது.

நைஜீரியாவில் உள்ள இந்திய தூதர் அபுஜா மூலமாக நைஜீரிய அரசை இந்திய கப்பல்துறை அமைச்சகம் அணுகி உதவி கோரியது. நைஜீரிய கடற்படை, அங்கு சென்று விசாரணை நடத்தியது.

நைஜீரிய அரசு, இந்திய தூதரகம், மத்திய கப்பல்துறை அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் 5 இந்திய மாலுமிகளும் கடந்த 27-ந் தேதி மீட்கப்பட்டனர். அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சி நடந்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.

மேலும் செய்திகள்