கனமழையால் மும்பையில் ரயில், விமான சேவை தொடர்ந்து பாதிப்பு

மும்பையில் கனமழை பெய்து வருகிறது. மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2019-07-03 03:15 GMT
மும்பை,

மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து பெய்து வருகிறது. குறிப்பாக மாநில தலைநகர் மும்பையில் தாமதமாக தொடங்கிய பருவமழை நகரை புரட்டி எடுத்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் 5 நாட்களாக இரவு, பகலாக விடாமல் கொட்டி தீர்த்து வருகிறது. நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

தாழ்வான பகுதிகளில் வீடுகளும், சாலைகளும் தெரியாத அளவுக்கு வெள்ளக்காடாக மாறி உள்ளன. சாலை, ரெயில், விமான போக்குவரத்தும் முடங்கி விட்டது. பொதுமக்கள் அவசியம் இன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

1974-ம் ஆண்டு மும்பையில் இதேபோன்ற பிரளயம் ஏற்பட்டது. அப்போது ஒரே நாளில் 375.2 மி.மீ. மழை பெய்தது. 45 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதே மழை அளவு பதிவாகி உள்ளது. அதாவது, நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 375.2 மி.மீ. பதிவாகி வரலாறு காணாத மழை பெய்து உள்ளது. தொடர்ந்து மும்பையில் கனமழை பெய்து வருவதால், ரயில், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  கனமழையால் பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் செய்திகள்