மும்பையில் கழிவு நீர் ஓடையில் தவறி விழுந்த 3 வயது சிறுவன்; மீட்கும் பணி தீவிரம்

மும்பையில் கழிவு நீர் ஓடையில் 3 வயது சிறுவன் தவறி விழுந்த அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது.

Update: 2019-07-11 07:33 GMT
மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் இறுதி வாரத்தில் இருந்து பெய்து வருகிறது.  இதில் கடந்த வாரத்தில் கனமழை பெய்ய தொடங்கியது.  இதனால் ஏற்பட்ட வெள்ளம் மும்பை நகரின் பல கிராமங்களை சூழ்ந்தது.  இதில் திவாரே அணையில் நீர் கசிவு ஏற்பட்டு வந்த நிலையில், திடீரென பெரிய விரிசல் ஏற்பட்டு அணையின் ஒரு பகுதி உடைந்து அதிக அளவு நீர் வெளியேறியது.

இதில் சிக்கி பலர் பலியாகினர்.  இதுவரை 20 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.  வெள்ளம் வழிந்தோடுவதற்காக கழிவு நீர் ஓடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கோரேகாவன் பகுதியில் அம்பேத்கர் நகர் பகுதியில் நடந்து சென்ற 3 வயது சிறுவன் அங்கிருந்த கழிவு நீர் ஓடையில் நேற்றிரவு தவறி விழுந்து விட்டான்.  இதுபற்றிய காட்சிகள் அங்குள்ள கேமிராவில் வீடியோவாக பதிவாகி உள்ளன.  இதனை தொடர்ந்து சிறுவனை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்