பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் வருகை குறித்து பிரதமர் மோடி வலியுறுத்தினார்

பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் வருகை குறித்து பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஆஜராகாதவர்களின் தினசரி அறிக்கையை கேட்டு உள்ளார்.

Update: 2019-07-16 08:49 GMT
புதுடெல்லி,

பாரதீய ஜனதா நாடாளுமன்றக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தனது கடுமையான நிலைப்பாடு தெரிவித்துள்ளார்.  இன்று, பிரதமர் மோடி  நாடாளுமன்றத்திற்கு வரத்தவறிய அமைச்சர்களின் பட்டியலை கேட்டுள்ளார். மாலைக்குள் பட்டியலை அனுப்பி வையுங்கள் என்றும் கூறியுள்ளார். 

பிரதமர் மோடி நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியிடம் இதனை தெரிவித்தார். நாடாளுமன்றத்திற்கு வரத்தவறிய அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் அமர்வு நடைபெறும் போது, ​​இரு அவைகளிலும் கலந்து கொண்ட அமைச்சர்களின் பட்டியல் இருக்கும். அதாவது, ஒவ்வொரு அமைச்சரும் இரு அவைகளிலும் எத்தனை முறை ஆஜரானார்கள் என்ற தகவல்கள் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு நாடாளுமன்ற அமைச்சர் சார்பாக வழங்கப்படுகின்றன.

நாடாளுமன்றத்திற்கு வரத்தவறிய பல அமைச்சர்கள் பட்டியலை பிரதமர் மோடி கேட்டுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் இது  குறித்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார். 

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது அவையில் இல்லாத சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் குறித்து பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்தார். அமைச்சர்கள் முறையாக அவையில் இருப்பதில்லை என புகார் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் தனக்கு கடிதம் எழுதியிருப்பதாக பாஜக  நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.

மேலும் செய்திகள்