இடதுசாரி முன்னாள் எம்.பி. ஏ.கே.ராய் மரணம்

இடதுசாரி முன்னாள் எம்.பி. ஏ.கே.ராய் மரணம் அடைந்தார்.

Update: 2019-07-21 19:30 GMT
தான்பாத்,

பழம்பெரும் இடதுசாரி தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஏ.கே.ராய் நேற்று காலமானார். அவருக்கு வயது 90. முதுமையால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால், அவர் கடந்த 8-ந் தேதி ஜார்கண்ட் மாநிலம் தான்பாத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

ஏ.கே.ராய், தற்போதைய வங்காள தேசத்தில் உள்ள சபுரா கிராமத்தில் பிறந்தவர். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. வேதியியல் படித்தார். அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. தான்பாத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 3 தடவை எம்.பி.யாக இருந்துள்ளார். பீகார் மாநில எம்.எல்.ஏ.வாக 3 தடவை பதவி வகித்துள்ளார். 1971-ம் ஆண்டு, சிபுசோரனுடன் இணைந்து, ‘ஜார்கண்ட் இயக்கம்’ தொடங்கினார்.

பின்னாளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து விலகினார். மார்க்சிஸ்ட் ஒருங்கிணைப்பு குழு என்ற மாநில கட்சியை ஆரம்பித்தார். தொழிற்சங்க பணிகளில் ஈடுபாடு காட்டினார். ‘அரசியல் துறவி’ என்று புகழப்பட்டார்.

மேலும் செய்திகள்