அமேசான், அலிபாபா பாணியில் சிறு தொழில் உற்பத்தி பொருட்களை விற்க தனி இணையதளம் - நிதின் கட்காரி தகவல்

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய சிறு, குறு தொழில்துறை மந்திரி நிதின் கட்காரி ஒரு கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

Update: 2019-07-26 00:21 GMT

புதுடெல்லி, 

வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும், நாட்டின் வளர்ச்சியிலும் சிறு, குறு தொழில்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய துறையை சேர்ந்தவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பதற்காக இன்னும் ஒரு மாத காலத்தில் தனி இணையதளம் தொடங்கப்படும்.

இதுதொடர்பாக அரசு மின்னணு சந்தையிடமும், மத்திய வர்த்தக மந்திரி பியூஸ் கோயலிடமும் பேசிவிட்டேன். அமெரிக்காவில் உள்ள அமேசான், சீனாவின் வளர்ச்சிக்கு உதவிய அலிபாபா போன்று இந்த இணையதளம் உருவாக்கப்படும். இதன்மூலம், அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இது, சிறு, குறு தொழில்துறைக்கு நல்ல வாய்ப்பு. அத்துறைக்கு வங்கிகள் வழங்கும் கடன் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்