கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 13,900 கனஅடி நீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 13,900 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2019-07-27 20:30 GMT
மண்டியா,

கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மாவட்டம் பாகமண்டலா, கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் இரு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதனால் கடந்த 19-ந்தேதி முதல் தமிழகத்திற்கு இரு அணைகளில் இருந்தும் காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்றும் கர்நாடகத்தில் உள்ள கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 13,900 கனஅடி நீர் காவிரியில் தமிழகத்திற்காக திறந்துவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்