தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நாளை மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2019-07-30 16:08 GMT

தமிழகத்தில் ஆங்காங்கே வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளான தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் தென்மேற்கு பருவமழையால் மழை கிடைக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நாளை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.  

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நாளை வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஜூன் மாதம் 1–ம் தேதி முதல் இன்று வரை 12 செ.மீ. மழை பெய்து இருக்க வேண்டும். ஆனால் 9 செ.மீ. மழைதான் பதிவாகி இருக்கிறது. இது இயல்பைவிட 28 சதவீதம் குறைவு ஆகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்