ஈரான் சிறை பிடித்த இந்தியர்கள் அனைவரும் உடல் நலமுடன் உள்ளனர்; வெளியுறவு துறை மந்திரி

ஈரான் சிறை பிடித்த இந்தியர்கள் அனைவரும் உடல் நலமுடன் உள்ளனர் என வெளியுறவு துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-03 16:21 GMT
ஈரான் அருகேயுள்ள ஹார்மோஸ் நீரிணை பகுதியில் சென்ற ஸ்டெனா இம்பீரோ என்ற கப்பலை கடந்த மாதம் 19ந்தேதி அந்நாட்டு பாதுகாப்பு படையினர் சிறை பிடித்தனர்.  அந்த கப்பலில் ஆதித்ய வாசுதேவன் என்ற தமிழக மாலுமி உள்பட 18 இந்தியர்கள் இருந்தனர்.  அவர்களை மீட்கும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு உள்ளது.

இதுபற்றி வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் கூறும்பொழுது, ஈரான் சிறை பிடித்த இந்தியர்கள் அனைவரும் உடல் நலமுடன் உள்ளனர்.  அவர்களுக்கு தேவையான வசதிகள் கிடைத்து வருகின்றன.  அவர்களை விடுவிப்பதற்கும் மற்றும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கும் வேண்டிய விசயங்களில் கவனம் செலுத்தி வருகிறோம்.

இந்த விவகாரத்தினை தீர்ப்பதற்காக தொடர்ந்து ஈரானிய அதிகாரிகளிடம் தொடர்பில் இருக்கிறோம்.  ஈரானின் தெஹ்ரான் நகரிலுள்ள நம்முடைய தூதரக அதிகாரிகள் அவர்களை சந்தித்து உள்ளனர் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்