வெற்றி பெற்றதாக நினைக்க வேண்டாம்; இது ஒரு வரலாற்றுப் பிழை: ப.சிதம்பரம் கடும் தாக்கு

வெற்றி பெற்றதாக நினைக்க வேண்டாம்; இது ஒரு வரலாற்றுப் பிழை என்று மத்திய அரசை ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார்.

Update: 2019-08-05 11:14 GMT
புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:- 

“ 370-ல் திருத்தம் கொண்டு வரலாமே தவிர, ரத்து செய்வது முறையாக இருக்காது. இந்திய வரலாற்றில் இது ஒரு துக்க தினம். மாநிலத்தின் உரிமையை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. மக்களின் உரிமையை காக்க வேண்டியது அரசின் மிகப்பெரிய கடமை.வெற்றி பெற்றதாக நினைக்க வேண்டாம். இது ஒரு வரலாற்றுப் பிழை. 370வது பிரிவு ரத்து மூலம் கல்லறை கட்டிவிட்டதை வருங்கால சமுதாயம் உணரும். 

மிகப்பெரிய தவறை இந்த அவை இன்று செய்துள்ளது. எதிர்கால சந்ததியினருக்காக, நான் உங்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன்.  இன்று காஷ்மீருக்கு நடந்தது நாளை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் நடக்கலாம். 

ஜம்மு-காஷ்மீரை போல நாளை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களும் பிரிக்கப்படலாம். சிறப்பு அந்தஸ்தை நீக்கியது பயனற்றது.  மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மாநில உரிமைகள் பறிப்பின் உச்சக்கட்டமாக காஷ்மீர் விவகாரத்தில் அரசு முடிவு எடுத்துள்ளது” என்றார்.

மேலும் செய்திகள்