தனிநபர்களை பயங்கரவாதியாக அறிவிக்கும் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

தனிநபர்களை பயங்கரவாதியாக அறிவிக்கும் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

Update: 2019-08-09 18:45 GMT
புதுடெல்லி,

தனிநபர்களை ‘பயங்கரவாதிகள்’ என்று அறிவிப்பதற்கான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்ட மசோதா, கடந்த மாதம் 24-ந் தேதி நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. கடந்த 2-ந் தேதி, மாநிலங்களவையிலும் நிறைவேறியது.

இரு அவைகளின் ஒப்புதலை பெற்றதால், அந்த மசோதா, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் அச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி, தனிநபர்களை பயங்கரவாதிகளாக அறிவிப்பதுடன், பயங்கரவாதம் மூலம் திரட்டிய சொத்துகளை முடக்கவும், அவர்கள் பயணம் செய்ய தடை விதிக்கவும் தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) அதிகாரம் அளிக்கப்படும்.

மேலும் செய்திகள்