60-வது பிறந்தநாள்: நிர்மலா சீதாராமனுக்கு, மம்தா பானர்ஜி வாழ்த்து

60-வது பிறந்தநாளை கொண்டாடிய நிர்மலா சீதாராமனுக்கு, மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2019-08-18 19:24 GMT
கொல்கத்தா,

இந்தியாவின் 2-வது பெண் நிதித்துறை மந்திரி என்ற பெருமையை பெற்ற மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

நிர்மலா சீதாராமனின் பிறந்தநாளையொட்டி மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘வாழ்த்துகள் நிர்மலா சீதாராமன். உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார்.

இதேபோல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்