மன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2019-08-19 12:22 GMT
புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக இன்று 
தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து காங்கிரஸ் சார்பில் மன்மோகன் சிங் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிட்டார். அவர் ஜெய்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு பரிசீலனை செய்யப்பட்டு ஏற்கப்பட்டது. ஆனால் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், இன்று அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாராளுமன்றத்தின் மேல்சபைக்கு மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் செய்திகள்