மந்திரி பதவிக்காக சிவசேனா பிரமுகர் ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்தார் - உறவினர் குற்றச்சாட்டால் பரபரப்பு

மராட்டியத்தில் மந்திரி பதவிக்காக சிவசேனா பிரமுகர் ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்ததாக, உறவினர் கூறிய குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-08-26 20:47 GMT
மும்பை,

மராட்டியத்தில் வரும் அக்டோபர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் முக்கிய எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளில் இருந்து பல்வேறு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து ஆளும் பா.ஜனதா மற்றும் சிவசேனாவிற்கு தாவி வருகின்றனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வந்த ஜெய்தத் சிர்சாகர் கடந்த மே மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ததுடன் கட்சியில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார். அவருக்கு கடந்த ஜூன் மாதம் மந்திரிசபை விரிவாக்கத்தின்போது பதவி வழங்கப்பட்டது.

இந்தநிலையில் சட்டசபை தேர்தலையொட்டி தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் பீட் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெய்தத் சிர்சாகரின் உறவினரான சந்தீப் சிர்சாகர், மந்திரி பதவிக்காக ஜெய்தத் சிர்சாகர் ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டினார். இது மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்