விநாயகர் சிலைக்கு ரூ.266 கோடி இன்சூரன்ஸ்

மும்பையில் விநாயகர் சிலைக்கு ரூ.266 கோடி இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-08-28 21:30 GMT
மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையில் விநாயகர் சதுர்த்தி வருகிற 2-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. அப்போது வீதிகளிலும், வீடுகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும்.

பொதுஇடங்களில் நிறுவி வழிபாடு செய்வதற்காக விதவிதமான விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன. இதனால் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகம் இப்போதே தொடங்கி விட்டது.

குறிப்பாக மும்பை கிங்சர்க்கிள் பகுதியில் நிறுவப்படும் விநாயகர் சிலை பணக்கார விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். சுமார் 90 கிலோ தங்கம், வெள்ளி, வைரநகைகளில் ஜொலிக்கும் இந்த விநாயகரை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். எனவே இந்த விநாயகர் சிலைக்கு 266 கோடியே 65 லட்சம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு உள்ளது. நகைகள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இவ்வளவு பெருந்தொகைக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்