ஜனாதிபதியாவது எப்படி? பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பிய மாணவன்

ஜனாதிபதியாவது எப்படி என கேள்வி எழுப்பிய மாணவனுக்கு பிரதமர் மோடி ஆச்சரியம் கலந்த பதிலளித்து உள்ளார்.

Update: 2019-09-07 05:21 GMT
பெங்களூரு,

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான்-2 என்ற விண்கலத்தை அனுப்பி உள்ளது. அந்த விண்கலத்திலிருந்து ‘விக்ரம் லேண்டர்’ கருவி பிரிந்து சென்று இன்று அதிகாலை நிலவில் தரை இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.  அது தரை இறங்கும் நிகழ்வை விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பிரதமர் மோடியும் இஸ்ரோ ஆய்வு மையத்தில் இருந்து பார்வையிடுவார் என கூறப்பட்டது.

இதனை அடுத்து விண்வெளி ஆய்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரதமருடன் சேர்ந்து இந்த நிகழ்வை பள்ளி மாணவ-மாணவிகளும் சேர்ந்து பார்வையிட அனுமதி அளிப்பதாக ‘இஸ்ரோ’ அறிவித்தது. இதற்காக இணையதளம் மூலம் வினாடி - வினா போட்டி நடத்தி மாணவர்களை தேர்வு செய்தது.

இந்த நிகழ்ச்சிக்காக பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு பிரதமர் மோடி நேற்று வருகை தந்துள்ளார்.  அவரை சந்தித்து மாணவன் ஒருவன், இந்தியாவின் ஜனாதிபதியாக வேண்டும் என்பது எனது நோக்கம்.  அதற்கு நான் என்ன நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என கேள்வி எழுப்பினான்.

அதற்கு பிரதமர் மோடி அந்த மாணவனிடம், ஜனாதிபதியாவதற்கு பதில் நீ ஏன் பிரதமராக கூடாது? என்று சிரித்து கொண்டே பதிலுக்கு கேள்வி எழுப்பினார்.  இதன்பின்பு அந்த மாணவனுக்கு பிரதமர் மோடி ஆட்டோகிராப் போட்டு கொடுத்து விட்டு சென்றார்.

மேலும் செய்திகள்