கர்நாடக முன்னாள் மந்திரி சிவக்குமாரின் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் - நாளை ஆஜராக உத்தரவு

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில், கர்நாடக முன்னாள் மந்திரி சிவக்குமாரின் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

Update: 2019-09-10 22:00 GMT
பெங்களூரு,

கர்நாடக மாநில முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான டெல்லி வீட்டில் ரூ.8.59 கோடி கணக்கில் வராத பணம் சிக்கியது. இதுகுறித்து விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 3-ந் தேதி அவரை கைது செய்தனர். அவர் தற்போது போலீஸ் காவலில் உள்ளார். அவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் டி.கே.சிவக்குமாருக்கு நெருக்கமானவர்களிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கிடையே டி.கே.சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு அமலாக்கத்துறை 12-ந் தேதி (அதாவது நாளை) நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளது. ஐஸ்வர்யாவின் வங்கிக்கணக்கில் இருந்து ஒரு தனியார் நிறுவனத்திற்கு ரூ.20 கோடி ஆன்லைன் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தவே அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்