வங்கிகள் இணைப்பை கண்டித்து நாடாளுமன்றம் முன்பு 20-ந்தேதி தர்ணா - வங்கி ஊழியர் சங்கம் முடிவு

வங்கிகள் இணைப்பை கண்டித்து நாடாளுமன்றம் முன்பு 20-ந்தேதி தர்ணா நடத்த வங்கி ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.

Update: 2019-09-11 21:15 GMT
புதுடெல்லி,

வங்கிகள் இணைக்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் நாடாளுமன்றம் முன்பு வருகிற 20-ந்தேதி தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் கூறுகையில், ‘வங்கி இணைப்பை கண்டித்து வருகிற 20-ந்தேதி காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றம் முன்பு தர்ணா நடத்தப்படும். அன்றைய தினமே மத்திய மந்திரி நிர்மலாசீதாராமனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்துள்ளோம். அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்