எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டம்: மறுஆய்வு செய்யக்கோரிய மனு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டம் குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-09-13 06:27 GMT
புதுடெல்லி,

பழங்குடியினர் மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் சில திருத்தங்களை செய்து உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 2018-ல் உத்தரவிட்டது. எஸ்.சி/எஸ்.டி சட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் புகாரில் குற்றம் சாட்டப்பட்டவரை உடனடியாக கைது செய்யக்கூடாது எனவும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கும்  ஷரத்துக்களையும்  வன்கொடுமை சட்டத்தில் அறிமுகம் செய்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன.  நாடு முழுவதும்  தொடர் போராட்டங்களில் பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டன. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி  மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் செய்திகள்