மோடியின் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மோடியின் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2019-09-17 19:33 GMT
ஆமதாபாத்,

பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளை சொந்த மாநிலமான குஜராத்தில் கொண்டாடினார். இதையொட்டி நர்மதா மாவட்டம் கெவடியா என்ற இடத்தில் உள்ள நர்மதா அணைக்கட்டு பகுதியில் மாநில அரசு ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். இதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

அங்கு பினாவியா (வயது 29) என்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும் பணியில் இருந்தார். அவர் ஆயுதத்துடன் படம் எடுப்பதற்காக தனது நண்பரான சக போலீஸ்காரர் கொங்கனியிடம் இருந்து துப்பாக்கியை வாங்கினார். தனது நெற்றியில் துப்பாக்கியை வைத்தபடி நின்ற அவர், விசையை அழுத்தி திடீரென சுட்டார். இதில் தோட்டா பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.பிரதமரின் பாதுகாப்பு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்