பிரதமர் மோடி, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகர் சென்றடைந்தார்

பிரதமர் மோடி ஹவுடி-மோடி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹூஸ்டன் நகர் சென்றடைந்துள்ளார்.

Update: 2019-09-21 17:34 GMT
டெக்ஸாஸ்,

இந்திய பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று இரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.  

இதனிடையே அவரது விமானம், செல்லும் வழியில் அவசர தேவைக்காக, ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்தில் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது.

பின்னர் விமானம் அடுத்த கட்டமாக அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு புறப்பட்டு சென்றது.

இந்நிலையில், பிரதமர் மோடி ஹூஸ்டன் நகர் தற்போது சென்றடைந்துள்ளார். அங்கு ஹவுடி-மோடி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இதே நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்பும் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 50 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூஸ்டன் நகரில் உள்ள என்.ஆர்.ஜி. ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.



 

இன்று முதல் 27-ம் தேதி வரை அமெரிக்காவில் தங்கியிருக்கும் மோடி, இரு நாடுகள் இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

மேலும் செய்திகள்