சரத்பவார் மீது நடவடிக்கை அரசியல் சந்தர்ப்பவாதம் -ராகுல்காந்தி கண்டனம்

சரத்பவார் மீது எடுத்துள்ள நடவடிக்கை அரசியல் சந்தர்ப்பவாதம் ஆகும் என ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Update: 2019-09-27 08:49 GMT
புதுடெல்லி

மராட்டிய  மாநில கூட்டுறவு வங்கியில் நடந்த மோசடி தொடர்பாக  அமலாக்கத்துறை பண மோசடி வழக்கில் தேசியவாத காங்கிரஸ் தலைவர்  சரத்பவார் பெயரையும் சேர்த்து உள்ளது. ஆனால் இதுவரை அவருக்கு சம்மன் அனுப்பப்படவில்லை இருந்தாலும் சரத்பவார் தான் அமலாக்கதுறை அலுவலகத்தில் விரைவில் ஆஜர் ஆகப்போவதாக கூறினார். மேலும் மத்திய அரசுக்கு மண்டியிட மாட்டேன் கைதாக தயார் என கூறி இருந்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இது குறித்து தனது ட்விட்டரில் தெரிவித்து இருப்பதாவது;-

பழிவாங்கும் இந்த அரசால் குறிவைக்கப்படும் சமீபத்திய எதிர்க்கட்சித் தலைவர் சரத்பவார் ஜி ஆவார். மராட்டிய  தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது அரசியல் சந்தர்ப்பவாதம் ஆகும் என கூறி உள்ளார்.


மேலும் செய்திகள்