மேற்கு வங்காளத்தில் குழந்தைகளுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை - மம்தா பானர்ஜி அறிவிப்பு

மேற்கு வங்காளத்தில் குழந்தைகளுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை அளிக்கப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

Update: 2019-09-29 22:27 GMT
கொல்கத்தா,

இதய நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ந்தேதி உலக இதய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தவகையில் நேற்று இந்த தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மாநில மக்களுக்கு சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘இன்று (நேற்று) உலக இதய தினம். ஆரோக்கியமான உடலுக்கு, ஆரோக்கியமான இதயம் தேவை. மாநில அரசின் ‘சிசு சதி’ திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு இதய நோய் தொடர்பான அறுவை சிகிச்சைகள் அனைத்தும் இலவசமாக செய்யப்படுகிறது. இது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதைப்போல மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் இதய நோய்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்