டெங்கு காய்ச்சலால் அவதிப்படும் 11 டாக்டர்கள்

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் டெங்கு காய்ச்சலால் 11 டாக்டர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Update: 2019-10-09 21:16 GMT
அவுரங்காபாத்,

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை சேர்ந்த 11 டாக்டர்கள் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். ரத்த பரிசோதனையின் அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்ட 11 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை அவர்களில் 5 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். 4 பேருக்கு ஆபத்தான நிலை இல்லாத போதிலும் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒருவர் மட்டும் அவரது உறவினர்கள் வேண்டுகோள்படி தற்போது மும்பைக்கு அனுப்பிவைக்கப்பட்டு இருக்கிறார்.

மேலும் செய்திகள்