சக ஊழியர்களால் மன உளைச்சல்; தெலுங்கானாவில் பொதுப்பணித் துறை பெண் ஊழியர் தற்கொலை

ஹைதராபாத் பொதுப்பணித் துறை பெண் ஊழியர் சக ஊழியர்களால் மன உளைச்சல் அடைந்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-10-18 02:42 GMT
ஹைதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மியாபூர் நகரத்தில் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான பாரத மிகு மின் நிறுவனத்தில், நேகா (33, திருமணமானவர்) என்பவர் கணக்குப் பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார்.

நேற்று அவர் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் அவரது விட்டிற்கு சென்று இறந்த நேகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், போலீசார் அவரது வீட்டிலிருந்து அவர் எழுதிய தற்கொலை கடிதத்தை மீட்டனர். நேகா பணிபுரியும் இடத்தில் அவரது மேல் அதிகாரி ஒருவர் மற்றும் சக ஊழியர்களால் மன துன்புறுத்தலுக்கு உள்ளாகி மிகுந்த மன உளைச்சல் அடைந்து இந்த தற்கொலை முடிவை எடுத்துள்ளார் என்று அவர் எழுதிய தற்கொலை கடிதத்தில் எழுதப்பட்டதாக ஹைதராபாத், மியாபூர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேகாவின் தற்கொலைக்கு அவரது கணவர் போலீசில் புகார் அளித்ததின் அடிப்படையில் 7 பொதுப்பணித் துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்