மத்திய அரசுக்கு பசுக்கள் மீதான நேசம், காகிதத்தில் மட்டும்தான் - ப.சிதம்பரம் டுவிட்டரில் காட்டம்

மத்திய அரசுக்கு பசுக்கள் மீதான நேசம், காகிதத்தில் மட்டும்தான் என ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Update: 2019-10-19 22:17 GMT
புதுடெல்லி,

மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தற்போது ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் வழக்கில், மத்திய அமலாக்கப்பிரிவு காவலில் வைத்து விசாரிக்கப்படுகிறார்.

இதற்கிடையே நாட்டின் பொருளாதார நிலை தொடர்பாக தினமும் 2 டுவிட்டர் பதிவுகளை வெளியிடப்போவதாக அவர் கடந்த புதன்கிழமை அறிவித்தார்.

அதன்படி நேற்று அவர் வெளியிட்ட ஒரு பதிவில், ‘‘நாட்டின் வேலை வாய்ப்பு நிலவரம் பற்றி கேட்டபோது கேட்டவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் தற்போது வேலை வாய்ப்பு நிலைமை மோசமாக உள்ளது என கூறி உள்ளனர். 30 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இது மோசம் அடையும் என தெரிவித்து உள்ளனர். இதன் பொருள், வேலை வாய்ப்பு நிலைமை நெருக்கடியில் உள்ளது என்பதுதான்’’ என கூறி உள்ளார்.

மற்றொரு பதிவில், ‘‘2012-2019 இடையே நாட்டு கால்நடைகளின் எண்ணிக்கை 6 சதவீதம் குறைந்துள்ளது. இதன் பொருள், பசுக்கள் மீதான மத்திய அரசின் நேசம், காகிதத்தில் மட்டும்தான்’’ என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்